இது ஓர் தமிழ் தகவல் களஞ்சியம்

Sunday, 27 March 2016

வள்ளலார் கூறும் 42 பாவங்கள்

பாவங்களின் 42 வகை-வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

கண்ணகியம்மன் தான் மடுமாதா!

“கண்ணகியம்மன் தான் மடுமாதா” என்பது பாப்பாண்டவருக்குத் தெரியுமா? என்கிறார் ஒரு சிங்களப் பேராசிரியர்!

யார் கடவுள்..?!

மாலும் மனிதன்
மலரோனும் தான் மனிதன்
ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்
சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை
- மகான் ஔவையார்

Tuesday, 22 March 2016

14 உலகங்கள் அல்லது லோகங்கள்

14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?, அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Monday, 21 March 2016

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரைவீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது. இந்தப்பதிவில் எளிமையான, அனுபவப்பூர்வமானமுறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி வெற்றி கொள்க.

முள்முருங்கை ஓர் மூலிகை

தினம் ஓர் மூலிகை: கல்யாண முருங்கை /முள்முருங்கை:- தோட்டங்களில் அலங்கார மலராக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை – முள் முருங்கை மரம்- ஏராளமான மருத்துவகுணம் கொண்ட மூலிகை. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். வீட்டுக்கு வேலியாகவும் வளர்ப்பர். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது. தாவரப்பெயர்- ERYTHRINA INDICA தாவரக்குடும்பம் – FABACEAE. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் எரித்ரினைன், எரிசோவைன், எரிசோடைன், எரிசோனைன், எரிசோப்பின், ஸ்டாக்கியாடின், எரிபிடின், ஃபெருலிக் அமிலம், கஃபியிக் அமிலம், அல்பினா, ஐசோப்ளவோன், டோகோசில் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படும். இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூகருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும். இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும். இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும். மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன் இலைச்சாறு 15 மி.லி, ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இருவேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும். இலைச் சாறு 50 மி.லி., தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும். இதன் இலைச்சாற்றை தினமும் குடித்துவர பெண்மலடு நீங்கி கருதரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும். இலைச்சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும். கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும். இலைச்சாறு 10 மில்லியுடன் வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.1 தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும். கல்யாண முருங்கையின் பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும். வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும். * கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும். * கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும். * கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும். * கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். * கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும். * கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும். * கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். * கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும். * கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும். * கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும். * இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து முள்முருங்கை வடை செய்கிறார்கள். *கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று. தெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும்

நவபாசாணம்

⚽️ #நவபாஷாணம் என்றால் என்ன? இரகசியங்களும், உண்மை தகவல்களும் !! ⚽️ 😨 ⚽️ .....( கண்டிப்பாக #படிக்கவும் )

🌻 #நவம் என்றால் ஒன்பது, #பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி #ஒன்பது #விஷங்களை சேர்த்துக் #கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம்  #64 வகைகள் உள்ளனவாம் ‼️ ......

🌻 இதில் #நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை #செயலிழக்க வைக்கக் கூடிய #தன்மையுடையது ‼️..... நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக #வேதியல், #இயற்பியல் பண்புண்டு 👍 .......

⚽️ | நவபாஷாணம் | ⚽️

🌻 சித்தரியல் முறைப்படி #அணுக்களைப் பிரித்து, மீண்டும் #சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்:

#1 .... சாதிலிங்கம்
#2 .... மனோசிலை
#3 .... காந்தம்
#4 .... காரம்
#5 .... கந்தகம்
#6 .... பூரம்
#7 .... வெள்ளை பாஷாணம்
#8 .... கௌரி பாஷாணம்
#9 .... தொட்டி பாஷாணம்

⚽️ | நவக்கிரக தன்மை | ⚽️

🌻 இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் #குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது #சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும் 😨 !!

⚽️ | நவக்கிரக சக்தி | ⚽️

🌻 நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ ⛄️ சிலைகள், நவக்கிரகங்களின் #சக்தியை #பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் !! 💍 👍

⚽️ | தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள் | ⚽️

🌻 தமிழ் நாட்டில் #மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. 💎 #பழனி #மலைக்கோவில், 💎 கொடைகானல் அருகே உள்ள #பூம்பாறை, 💎 #குழந்தை #வேலப்பர் கோயில். மற்றொன்று #தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

⚽️ | நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள் | ⚽️

🌻 மூன்றில் இரண்டு சிலைகள் #போகர் 😨 உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது #தெரியவில்லை ❗️ என்றும் கூறப்படுகிறது.

⚽️ |நவக்கிரக தோஷம் கழியும் | ⚽️

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு #நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும் ❗️.... பழனிமலை #தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்  👍 என்று கருதப்படுகிறது.

⚽️ | நோய் தீர்க்கும் மருந்து | ⚽️

🌻